நாமல் வராமல் விடுவதும் ஆதரவு தான் : ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு – ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு
நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பில் நாமல் ராஜபக்ச வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விடுவது ஒரு விதத்தில் ஆதரவு தெரிவிப்பது தான் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வீதியில் போடப்பட்ட கற்களால் ஆபத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொள்ளும் மக்கள்!
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவு செலவு திட்டத்திற்கு தான் வருகை தரவபோவதில்லை என தெரிவித்துள்ளார்.
அவர் அவ்வாறு வருகை தராது இருப்பது கூட ஒருவகை ஆதரவாகவே கருத்திற்கொள்ளலாம்.
நாளை புதன்கிழமை இடம் பெறவுள்ள வாக்கெடுப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவாக வாக்களிக்கும் ஏனெனில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவில் தலைமைத்துவத்தில் முன்னோக்கி கொண்டு செல்லலாம் என நம்புகிறோம்.
தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது அதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் தாழமுக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வற் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எம் எம் எவ் கடன் வளங்கள் ஒரு காரணமாக இருக்கின்ற நிலையில் அவ்வாறு அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம்.
ஆகவே வரி விதிப்பது நீண்ட காலத்துக்கு இல்லாத விடாது வரித் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.