12.5 கிலோ லிட்ரோ எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 300 ரூபாவிற்கும் அதிக தொகையில் குறைக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு இன்று விடுக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்தமையினாலும் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றமையினாலும் இச் சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் அன்றி கடந்த 3 ஆம் திகதி லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.