துபாயில் மாதவன் வாங்கிய சொகுசு படகு: ரசிகர்கள் ஆச்சரியத்தில்!
புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதில், நயன்தாரா மற்றும் மாதவன் தங்களது குடும்பத்துடன் துபாயில் ஒரு சொகுசு படகில் கடலில் சௌகரியமாக செல்கின்றனர். இந்த காணொளி மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
“டெஸ்ட்” திரைப்படத்தில் நயன்தாரா, மாதவனுடன் சேர்ந்து குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் படப்பிடிப்பு முடித்து, விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
புத்தாண்டு கொண்டாட துபாய்க்கு சென்ற நயன்தாராவை, தனது சொந்த படகுக்கு மாதவன் அழைத்து சென்றுள்ளார். இதன் பின்னணியில், அந்த படகு மாதவனின் சொந்தமானது எனவும், அதன் விலையும் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
துபாயில் சமீபத்தில் வீடு வாங்கிய மாதவன், தற்போது ஓய்வு எடுப்பதற்கும், தனிப்பட்ட எழுத்துப் பணிகளுக்காக ஒரு சொகுசு படகை வாங்கியுள்ளார். 40 அடி நீளம் கொண்ட இந்த படகின் விலை ரூ. 14 கோடி என கூறப்படுகிறது, இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.