மகாத்மா காந்தியின் 76 வது சிரார்த்த தின நிகழ்வுகள்
மகாத்மா காந்தியின் 76 வது சிரார்த்த தின நிகழ்வுகள் நேற்று (30) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் காந்தி சேவா நிலையத்தினரின் அனுசரணையுடன் நேற்றைய நிகழ்வுகள் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை முன்றலில் இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது
இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், காந்தி சேவா நிலைய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வில், காந்தியம் காலாண்டு பத்திரிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது பத்திரிக்கையை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரி வெளியிட்டு வைக்க யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் பெற்றுக் கொண்டார்.