ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு திருத்தப் பிரேரணை கட்சியின் மத்திய குழுவில் நேற்று (01) நிறைவேற்றப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கட்சியின் தலைவருக்கு சர்வாதிகார அதிகாரம் இருக்கும் என்று குற்றம் சாட்டி, கட்சியின் பிரதிநிதிகள் குழுவும் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று பிற்பகல் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.
இது தொடர்பான கலந்துரையாடலில் இருந்து வெளியில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கட்சியின் தலைவருக்கு சர்வாதிகார அதிகாரம் ஏற்படும் வகையில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.