Welcome to Jettamil

மன்னார் கடற்கரை பகுதிகள் தூய்மையாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Share

தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப்பொருளில் , சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வுகள் இன்றைய தினம்(21) மன்னாரில் இடம் பெற்றது.

அதற்கு அமைவாக மன்னார் சௌவுத்பார்,கீரீ,தாழ்வுபாடு,நடுக்குடா போன்ற கடற்கரை பகுதிகளில் தூய்மையாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கடல்சார் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,கடற்படையினர், மற்றும் மன்னார் நகரசபை,மன்னார் பிரதேச சபை, பொதுமக்கள் இணைந்து கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை