Welcome to Jettamil

மன்னாரை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி

Share

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்து இன்று புதன்கிழமை(21) மாலை மன்னார் நகர பகுதியை வந்தடைந்தது.

5 ஆம் மற்றும் ஆறாம் நாட்களான 19 ஆம் 20 ஆம் திகதிகளில் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியா வின் பல்வேறு கிராமங்களுக்கு சென்றிருந்தது. இதன்போது மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

07 நாளான இன்று புதன்கிழமை காலை மடு வீதியூடாக பயணித்து இன்று புதன்கிழமை(21) மாலை மன்னார் நகர் பகுதியை வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை