Welcome to Jettamil

மன்னாரில் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

Share

மன்னாரில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்ற 7 மீனவர்கள் கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேசாலையிலிருந்து நேற்றுமுன்தினம் மாலை 3 மணியளவில் கடலுக்குப் புறப்படத் தயாரான படகுகளைக் கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டதால் பாதிப்படைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்பின்னர், மீனவர்கள் கடற்படையினரிடம் மன்னிப்புக் கோரி சமரசத்தின அடிப்படையில் தொழிலுக்குச் சென்றனர்.

அவர்கள் மாலை 5.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அவ்விடத்துக்குப் படகில் சென்ற கடற்படையினர் மீனவர்களை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியதோடு தீடைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு ஆறு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தீடையில் தாக்கப்பட்ட 6 மீனவர்களும் ஏனைய மீனவர்களின் உதவியுடன் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மீனவர் சங்கங்கள், பங்குத் தந்தை ஆகியோர் கடற்படையின் உயர் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் தீர்வு கிட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை