Welcome to Jettamil

அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சி : வசந்த சமரசிங்

Share

அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சி : வசந்த சமரசிங்

அரிசி தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ள நிலையில், தேர்தலில் படுதோல்வியடைந்த தரப்பினர் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க திட்டமிட்டு அரசியல் சூழ்ச்சிகளை உருவாக்கி வருகின்றனர் என்று வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

அரிசி, தேங்காய் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் தட்டுப்பாட்டின் பின்னணியில் பல்வேறு சூழ்ச்சிகள் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். “எல்லா சூழ்ச்சிகளையும் சட்டத்தின் மூலம் தோற்கடிப்போம்” என்று அதில் மேலும் கூறினார்.

அரிசி தட்டுப்பாட்டை தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரிசி உற்பத்தியாளர்களை நெருக்கடிக்க உள்ளாக்குவதோ அல்லது அவர்களின் தொழிற்துறையை கேள்விக்குள்ளாக்குவதோ எமது நோக்கமல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

நேரடியாக விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்து, அதனை அரிசியாக்கும் புதிய திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகவும், அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பான மாபியாக்களுக்கு எப்போது கூட அடிபணியாமல் நமது நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை