மாவை சேனாதிராஜா காலமானார்!
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா (வயது 82) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தவறி விழுந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று புதன்கிழமை உயிரிழந்தார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.