Welcome to Jettamil

காவல் நிலையத்தில் சரணடைந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

Share

காவல் நிலையத்தில் சரணடைந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இன்று புதன்கிழமை மதியம் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய காரணத்தினால், அவருக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அவர் இன்று காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை