16 ஆம் திகதி முதல் பால் மா விலை அதிரடியாகக் குறைகிறது
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை எதிர்வரும் ஜனவரி 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் கணிசமாகக் குறைக்கப் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
1 கிலோகிராம் பால் மா தற்போதைய விலையிலிருந்து 125 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
400 கிராம் பால் மா தற்போதைய விலையிலிருந்து 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
உலக சந்தையில் பால் மாவின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், அதன் நன்மைகளை உள்நாட்டு நுகர்வோருக்கு நேரடியாக வழங்கும் நோக்கில் இந்த விலைக் குறைப்புச் செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நிலைமைகள் சாதகமாக அமையும் பட்சத்தில், வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஒருமுறை விலையைக் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.





