Welcome to Jettamil

யாழ். வீதியில் ஜனாதிபதி நடைப் பயிற்சி! – வைரலாகும் காணொளி

Share

யாழ். வீதியில் ஜனாதிபதி நடைப் பயிற்சி! – வைரலாகும் காணொளி

தைப்பொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று அதிகாலை பலாலி வீதியில் சாதாரண உடையில் நடைப்பயிற்சி (Morning Walk) மேற்கொண்ட காட்சி பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி பதவியேற்ற பின்னரும் தனது வழமையான எளிமையைக் கடைப்பிடிக்கும் வகையில், எவ்விதமான ஆடம்பரங்களுமின்றி, சாதாரண விளையாட்டு உடையில் அவர் வீதியில் செல்வதை காணமுடிகிறது.

அந்தப் பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர், ஜனாதிபதி வீதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைக் கண்டு அதனைத் தமது கையடக்கத் தொலைபேசிகளில் படம்பிடித்துள்ளனர். இந்தக் காணொளிகள் தற்போது முகநூல் மற்றும் டிக்-டாக் தளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

ஒரு நாட்டின் ஜனாதிபதி யாழ். வீதிகளில் எவ்வித தடையுமின்றி நடைப்பயிற்சி செய்வது, வடக்கில் நிலவும் அமைதியான சூழலையும் அவரது எளிமையான அணுகுமுறையையும் காட்டுவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று வேலணையில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும், மன்னாரில் காற்றாலை மின் திட்ட நிகழ்விலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை