இந்தோனேசியாவில் மாயமான விமானம்: மலைப்பகுதியில் சிதைவுகள் மீட்பு!
இந்தோனேசியாவின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்குச் சொந்தமான ATR 42-500 ரக விமானம் ஒன்று, 11 பேருடன் நேற்று (ஜனவரி 17) மக்காசர் நகருக்கு அருகில் திடீரெனக் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து இந்தோனேசியப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் உள்ள புலுசருன் (Bulusaraung) மலைப்பகுதியில் குறித்த விமானத்தின் சிதைவுகளை அதிகாரிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர். விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அதில் பயணித்த 11 பேரின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சிதைவுகள் உள்ள பகுதிக்குச் சென்று மீட்புப் பணிகளை முன்னெடுக்க விசேட தேடுதல் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விமானப் போக்குவரத்துத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோசமான காலநிலையா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது மீட்புப் பணிகளின் பின்னரே தெரியவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




