ஒரே நாளில் 2000 இற்கும் மேற்பட்டோர் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கைகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்டவர்களில் 185 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 33 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 209 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 228 சந்தேக நபர்களும் இந்த விசேட சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் நத்தார் பண்டிகை தினமன்று கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையில் காவல்துறை உத்தியோகத்தர்களும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.