Welcome to Jettamil

பருத்தித்துறையில் மூன்று கோடிக்கு மேற்பட்ட கஞ்சா மீட்பு!

Share

பருத்தித்துறையில் மூன்று கோடிக்கு மேற்பட்ட கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை போலீசாரால் நேற்று மதியம் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நேற்றையதினம் கேரள கஞ்சாவை பருத்தித்துறை கடற்பரப்பில் இறக்க முற்பட்டபோது, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு 47 பொதி கஞ்சாவை கைப்பற்றியதுடன் படகு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், கஞ்சாப் பொதிகள், படகு உட்பட்ட சான்றுப் பொருட்களையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த பொலிஸார் தயாராகி வருகின்றனர். மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் 3 கோடிக்கும் அதிக பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை