சிறப்பாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட பண்பாட்டு பெருவிழா -2023
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், வடமாகாண பண்பாட்டுத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி திணைக்களமும் இணைந்து நடாத்திய மாவட்ட பண்பாட்டு பெருவிழா இன்றயதினம் 15.12.2023 வெள்ளிக்கிழமை
மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் திரு.நா.வேதநாயகன் அவர்களும், கெளரவ விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. மாலதி முகுந்தன் மற்றும் பிரதேச மூத்த கலைஞர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தார்கள்.
அதிகாரம் இதழ் 2 நூல் வெளியீட்டு விழா!
கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பல்வேறுபட்ட கலைநிகழ்வுகள், அதிதிகளின் உரைகள் என்பன இடம் பெற்றதுடன் நிகழ்வின் இறுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைத்துறைக்கு மிகுந்த பங்களிப்பை நல்கிவரும் 6 மூத்த கலைஞர்களிற்கு “முல்லைக் கலைக்கோ” விருதும் கலைத்துறைக்கு மிகுந்த பங்களிப்பை நல்கிவரும் 6 இளம் கலைஞர்களிற்கு “முல்லை இளஞ்சுடர்” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் திரு.சி.குணபாலன், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர் திரு. க. லிங்கேஸ்வரன், மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், , சமுர்த்தி பணிப்பாளர் திரு.மு.முபராக் மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.க.ஜெயபவானி,மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர், அரச திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.