யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் இராணுவத்தினர் புகைப்படமெடுத்து அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டனர்.
சாவகச்சேரி சந்தை கட்டிட தொகுதியின் மேல் தங்கியுள்ள இராணுவத்தினரே இவ்வாறு இராணுவ சீருடை மற்றும் சிவிலுடையுடன் புகைப்படமெடுத்து அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.