லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை – ஜூலை மாத அறிவிப்பு
ஜூலை மாதத்திற்காக லாப் சமையல் எரிவாயு விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படமாட்டாது என லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் அறிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள விலைகள் பின்வருமாறு:
- 12.5 கிலோ சிலிண்டர் – ரூ. 4,100
- 5 கிலோ சிலிண்டர் – ரூ. 1,645
இதே நேரத்தில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (ஜூன் 30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
விலை மாற்றமின்றி தொடரும் எரிபொருட்கள்:
- 4 ஸ்டார் யூரோ 4 லங்கா சுப்பர் டீசல்
- 95 ஒக்டேன் யூரோ 4 பெட்ரோல்