இங்கிலாந்தை சேர்ந்த நூலியலாளர் என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணம் பொதுநூலக வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களையும் கொண்ட “Rising from the Ashes” என்ற ஆங்கில நூலும், யாழ்ப்பாண பொது நூலகம் என்கிற தமிழ் நூலினதும் வெளியீட்டு விழா 18.07.2023 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து, யாழ். பொதுசன நூலகத்தின் பிரதம நூலகரான திருமதி அனுசியா சிவகரனின் வரவேற்புரை இடம்பெற்றது.
குலசிங்கம் வசீகரன் அவர்களின் வெளியீட்டுரையினை தொடர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
நூல்களின் முதற் பிரதிகளினை இரு நூல்களின் ஆசிரியரான என்.செல்வராஜா வெளியிட்டு வைக்க கல்வியியலாளரும், எழுத்தாளருமான நடராஜா அனந்தராஜ் பெற்றுக் கொண்டார்.
Rising from the Ashes நூல் பற்றிய கருத்துரையினை கவிஞர் சோ.பத்மநாதன் நிகழ்த்தினார். தொடர்ந்து யாழ். பொதுநூலகம் குறித்த நூல் தொடர்பிலான கருத்துரையினை சற்குணம் சத்தியதேவன் நிகழ்த்தினார்.
நூலாசிரியர் கௌரவிப்பினை தொடர்ந்து இரு நூல்களின் ஆசிரியரான என். செல்வராஜாவின் ஏற்புரை இடம்பெற்றது.
யாழ். பொதுசன நூலகத்தின் உதவி நூலகரான அனிதா தயாளன் நன்றியுரையினை நிகழ்த்தினார்.