உக்ரைனில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூடும் என்றும், அதற்கான பயிற்சியில் ரஷ்யா ஈடுபடுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
ஒருவேளை ரஷ்யா அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால், அது மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி ஜைட்சேவ் தெரிவித்தார்.
உக்ரைன் மீது நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைக்கு இது பொருந்தாத ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.