Welcome to Jettamil

கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பான அறிவிப்பு

Share

வருடத்தின் முதல் 05 மாதங்களில் 288,648 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக  குடிவரவு மற்றும் குடியகல்வு  திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வெளிநாடுகளில் தொழில்  தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடவுச்சீட்டு தயாரிக்கும் பணியில் பெரும்பாலானோர் ஈடுபட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார். வருடத்தின் முதல் 05 மாதங்களில் 288,648 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், 2021 ஆம் ஆண்டில் மட்டும் 382,206 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டு ஜனவரியில் 52,278, பிப்ரவரியில் 55,381, மார்ச்சில் 74,890, ஏப்ரலில் 53,151, மே மாதத்தில் 52,945 என மொத்தம் 52,278 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் செயற்பாடுகளுக்காக வருபவர்கள் வழமையாக சந்திப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாளாந்தம் முன்பதிவு செய்யாதவர்களால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தைச் சுற்றி பல கிலோமீற்றர் தூரம் வரிசைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மாத்திரம் ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்குவதுடன், சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆவணங்களை தலைமை அலுவலகத்தில் வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கோரியுள்ளது.

இதேவேளை தொழிலாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டாலும், தொழிலாளர் திணைக்களத்தின் சேவைகளுக்கு எந்த  இடையூறும் ஏற்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாமலோ அல்லது தாமதப்படுத்தாமலோ இருப்பதை உறுதிப்படுத்துவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறை ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை