Welcome to Jettamil

தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு

Share

நேற்று முன்தினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இளவாலை பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் வீட்டின் உள்ளே தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

இதனையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உத்தரவேல் புவனேந்திரன் (வயது 65) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை