வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா- பறநட்டகல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஸ்ணன் என்பவர், அறுவடை இயந்திரத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் மைத்துனருடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, எதிர்த் திசையில் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 42 வயதுடைய பாலகிருஸ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மைத்துனர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், ஓமந்தை காவல்துறையினர் அதனைக் கைப்பற்றி ஓமந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.