தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 15 ஆயிரம் தொன் நிவாரண பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னையில் இருந்து 30 கோடி ரூபா பெறுமதியான 9 ஆயிரத்து 45 தொன் அரிசி, 1 கோடி 50 லட்சம் ரூபா மதிப்பிலான 50 தொன் ஆவின் பால் மா, 1 கோடி 44 லட்சம் ரூபா பெறுமதியான 8 தொன் மருந்து பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தலைமை தாங்கினார்.
67 கோடி 70 லட்சம் ரூபா பெறமதியான 15 ஆயிரம் தொன் நிவாரண பொருட்களுடன் இந்தக் கப்பல் புறப்பட்டுள்ளது.