யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று (20) ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, புதூர் அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
குறித்த நபர் வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஐந்து கொரோனா நோயாளிகளும், மேலும் இரண்டு வைத்தியசாலைகளில் நான்கு கொரோனா நோயாளிகளும் உள்ளனர்
இதுவரை 9 நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.