நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் நேற்று (16) மாலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜின் பிரதிநிதியாக இந்தியத் துணைத்தூதரக அதிகாரி பிரவின் கலந்துகொண்டு அவர் தோரண வாயிலைத் திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தோரண வாயில் பெயர்ப்பலகையையும், சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறு திருமுருகன் எதிர்காலத்தில் தோரண வாயிலில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திக்கான பெயர்ப்பலகையையும் திறந்து வைத்தனர்.
இதேவேளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட. தொல்பொருட் திணைக்களத்தின் யாழ்ப்பாணத்துக்கான உதவிப் பணிப்பாளர் பந்துலஜீவ தாரண வாயிலுக்கான மின் அலங்கார ஆளியையும் ஆரம்பித்து வைத்தார்.
தோரண வாயில் திறப்பின் பின்னர் மந்திரிமனையில் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் யாழ். மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் நல்லூர் பிரதேச செயளாளர் எழிலரசி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் , பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.