Thursday, Jan 16, 2025

புகையிரதத்தின் கழிவறையில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது

By Jet Tamil

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிவறையில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய திருமணமாகாத இருவர் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த ரயிலில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் புகையிரத அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் சிறுமியின் பெற்றோரை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி, கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்துள்ளார்.

கடந்த 25ம் தேதி குழந்தை பெற்றுக் கொள்ளப்பட்டு,பின்னர் ரயிலில் விடப்பட்டுள்ளது.

பண்டாரவளை கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு