திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று (5) மாலை திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி அருன் ஹேமச்சந்திரா தலைமையில் இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.