நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயினாலும், ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயினாலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 பெட்ரோலின் புதிய விலை 410 ரூபாயாகவும், ஒக்டேன் 95 பெட்ரோலின் புதிய விலை 510 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என்றும், எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, பெட்ரோல் விலையை இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ள நிலையில் லங்கா ஐஓசி நிறுவனமும், பெட்ரோல் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்துக்கு அமைய, ஐஓசி நிறுவனமும் விலைகளை திருத்தியமைத்துள்ளது.





