Friday, Jan 17, 2025

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசத் தெரிந்த பொலிஸார் கடமையில் இல்லை!

By kajee

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசத் தெரிந்த பொலிஸார் கடமையில் இல்லை!

இன்றையதினம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என அங்கு கடமையில் இருந்த சிங்கள பொலிஸார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

ஊடகவியலாளர் ஒருவர் செய்தி ஒன்றினை உறுதிப்படுத்துவதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் 0212263227 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர், தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என்றால் ஒரு அவசர முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கு ஒருவர் வந்தால் என்ன செய்வீர்கள் என வினவியவேளை, அவர்கள் நாளையதினம் தான் முறைப்பாடு பதிவு செய்யலாம் என அசமந்தமாக  தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில், தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் 24 மணிநேரமும் கடமையில் இருப்பது கட்டாயமாகும். சிங்களம் தெரியாத ஒருவர் ஒரு அவசர விடயம் குறித்து பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கவோ, அல்லது வேறு விடயங்களுக்கோ பொலிஸ் நிலையத்திற்கு செல்லும்போது, தமிழ் பேசத் தெரியாத பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இருக்கும் போது தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

எனவே குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடமை நேரங்களை அட்டவணையிடும்போது இந்த விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு