பொங்கல் 2025: இந்த ஆண்டு பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?
Pongal 2025: தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பொங்கல், விவசாயத்திற்கு உதவும் இயற்கை வளங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை விவசாயிகள், காலநடைகள் மற்றும் பிற இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வழிபாட்டு அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில், நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் சிறப்பு
பொங்கல் பண்டிகை, புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியுடன் வெல்லம் மற்றும் பால் சேர்த்து தயாரிக்கப்படும். மேலும், வீடு வாசலிலும், உள்ளே பல வண்ணமயமான கோலங்கள் போட்டு, தோரணங்கள் கட்டி, வீடுகளை அழகாக அலங்கரிக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் வரலாறு
பொங்கல் பண்டிகை, பண்டைய தமிழ் கலாச்சாரத்தில் உருவான ஒரு நிகழ்வு ஆகும். விவசாயிகள், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். காலப்போக்கில் இந்த பழக்கம் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2025 இல் பொங்கல் எப்போது?
2025 இல் பொங்கல் பண்டிகை 14 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் வைக்க உகந்த நேரம்:
2025 இல் பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 07.55 முதல் 09.29 வரை ஆகும்.
நான்கு நாள் பொங்கல் பண்டிகை:
போகிப் பண்டிகை – ஜனவரி 13, 2025 (திங்கட்கிழமை)
தைப்பொங்கல் – ஜனவரி 14, 2025 (செவ்வாய்க்கிழமை)
மாட்டுப்பொங்கல் – ஜனவரி 15, 2025 (புதன்கிழமை)
காணும் பொங்கல் – ஜனவரி 16, 2025 (வியாழக்கிழமை)
போகிப் பண்டிகை (ஜனவரி 13, 2025): மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படும் இந்த நாள், விவசாயத்திற்கு உதவிய இந்திரனை வணங்குவதற்காக செலவிடப்படுகிறது. மக்கள் வீடுகளை சுத்தம் செய்து, உபயோகப்படாத பொருட்களை எரிப்பதன் மூலம் இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
தைப்பொங்கல் (ஜனவரி 14, 2025): இது பொங்கல் பண்டிகையின் முக்கியமான நாள். தமிழர் தை மாதத்தின் முதல் நாளில், புதிய அறுவடை செய்த அரிசியுடன் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வழிபடுகிறார்கள்.
மாட்டுப்பொங்கல் (ஜனவரி 15, 2025): இந்த நாளில், விவசாயத்திற்கு உதவிய மாடுகள் மற்றும் பிற கால்நடைகளை அழகாக அலங்கரித்து, அவற்றிற்கு பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்கிறார்கள்.
காணும் பொங்கல் (ஜனவரி 16, 2025): விவசாயிகள், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள். இந்நாளில், பெரும்பாலான இடங்களில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்கள் நடைபெறும்.
உலகெங்கும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது, இது தமிழர் கலாச்சாரத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துச்செல்லும் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்.