வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் பொங்கல் விழா
கிழக்கு மாகாண வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உழவர் திருநாளின் பொங்கல் விழா இன்று வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது.
இதில் தேவஸ்தான முன்றலில் தைத்திருளின் பொங்கலை பொங்கி, வழிபாடுகளை நடாத்தி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் 70 மேற்பட்ட கிழக்கு மாகாண வந்தாறு மூலை பல்கலைக் கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.