வன்முறை சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கத்தோலிக்க திருச்சபை தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் புனித பீட்டர் சதுக்கத்தில் வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய பாப்பரசர் பிரான்சிஸ்,
“உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை கேட்டுக்கொள்கிறேன்.
அணு ஆயுத யுத்த ஆபத்து அபத்தமானது. தீவிர அமைதி ஒப்பந்தத்திற்கு, திறந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி முன் வர வேண்டும்” எனவும் வேண்டுகோள் விடுத்தார்.