Welcome to Jettamil

எரிபொருள் தட்டுப்பாட்டினால் மீண்டும் மின்வெட்டு அமுல்?

Share

எரிபொருள் பற்றாக்குறையினால், நாட்டின் மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

டொலர் நெருக்கடியினால் போதியளவு எரிபொருள் இறக்குமதி மேற்கொள்ளப்படாதுள்ளதால், அனல் மின்நிலையங்களின் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள மிதவை மின் நிலையம் மற்றும், சபுகஸ்கந்த மின்நிலையம் என்பனவற்றுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிறுத்தியுள்ளது.

அதிகபட்ச மின்நுகர்வு நேரத்தில், 2600 மெகாவாட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறது.

சபுகஸ்கந்தவில் 160 மெகாவாட்ஸ்சும், மிதவை மின் நிலையத்தில் 60 மெகாவாட்சும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது தடைப்பட்டுள்ளன.

அத்துடன் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதிஉள்ளிட்ட மேலும் இரண்டு மின் உற்பத்த நிலையங்களும் செயலிழந்துள்ளதாவும், அதிக மின்நகர்வு நேரத்தில், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாலை 5.30 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும் இடையில் ஒவ்வொரு மணிநேரம் மின்சாரம் பிரதேச ரீதியாக தடைப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை