Welcome to Jettamil

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Share

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் (Afghanistan) இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் இன்று அதிகாலை (நவம்பர் 3, 2025) ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று அதிகாலை 12:59 மணிக்கு (உள்ளூர் நேரம்) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் உள்ள பல்ஹா மாகாணம், மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாகக் கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது பாதிப்புகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் 2,200 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை