செம்மணியில் உறங்கும் ஆத்மா போன்று வேடமிட்டு கலக்கிய முன்பள்ளி சிறுமி
செம்மணி மனித புதைகுழியில் தோண்டப்பட்டு வரும் மாதிரி எலும்பு கூடு போன்று வந்த வினோதவுடை முன்பள்ளி மாணவி ஒருவர், “ஆத்மா சாந்தியடைய விடுங்கோ” என கூறி தனது மழலை பேச்சினால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
பொலிகண்டியில் உள்ள அம்பிகை முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வின் பொது இந்த காட்சி இடம்பெற்றது. இந்த நிகழ்வு பொலிகண்டி மருதாம்புலம் ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய முன்றலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது..
இதில் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுக்களினை தொடர்ந்து, சிறார்களின் வினோதவுடைபோட்டிகள் இடம்பெற்றன. இதில் மாணவி ஒருவர் செம்மணி மனித புதைகுழியில் தோண்டப்பட்டு வரும் மாதிரி புத்தகப்பை மற்றும் பால் போச்சியுடன் எலும்புகூட்டை தனது தோளில் சுமந்தவாறு சென்று பல்வேறு கேள்விகளுக்கான கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

இறுதியில் “ஆத்மா சாந்தியடைய விடுங்கோ ” என கேட்டபோது ஆலய மணியோ ஓங்கார ரீங்காரமாக ஒலித்ததை அங்கிருந்த பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கியது.
மேலும் தமிழர் தாயகத்தில் தற்போது சச்சைக்குள்ளாகி வரும் செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான மாதிரி எலும்புகூட்டுடன் வினோதவுடையாக சென்ற மாணவி விசிந்தன் கேதாரினி முதலாவது இடத்தினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.





