Welcome to Jettamil

தேசத்தை மீளக் கட்டியெழுப்ப களம் இறங்கிய ஜனாதிபதி! 500 பில்லியன் ரூபா செலவில் ‘Rebuilding Sri Lanka’ திட்டம் ஆரம்பம்!

Share

தேசத்தை மீளக் கட்டியெழுப்ப களம் இறங்கிய ஜனாதிபதி! 500 பில்லியன் ரூபா செலவில் ‘Rebuilding Sri Lanka’ திட்டம் ஆரம்பம்!

டிட்வா சூறாவளி ஏற்படுத்திய வடுக்களைத் துடைத்து, நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் உன்னத நோக்கில் “Rebuilding Sri Lanka” எனும் தேசியத் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான 25 பேர் கொண்ட ஜனாதிபதி பணிக்குழு ஒட்டுமொத்த மீளமைப்புப் பணிகளையும் கண்காணிக்கும்.

2026 ஆம் ஆண்டிற்கான 500 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீட்டு நிதி, வெளிநாட்டு உதவிகள் மற்றும் ‘Rebuilding Sri Lanka’ நிதியம் மூலம் நிதி திரட்டப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட 20,000 முதல் 25,000 வரையிலான வீடுகளைக் கட்டியெழுப்பல், சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைத்தல்.

இந்தத் திட்டத்தின் கீழ் எட்டு உப-குழுக்கள் (Sub-committees) அமைக்கப்பட்டுள்ளன. இவை முறையே வீடமைப்பு, உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் நிதி முகாமைத்துவம் போன்ற விடயங்களைக் கவனிக்கும். உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை