அவசர அடிப்படையில் எரிபொருள் விநியோக ஒத்துழைப்புக் கோரி, இலங்கை அரசாங்கம், சவூதி அரேபியாவை நாடியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நேற்று முன்தினம் சவூதி அரேபிய தூதரகத்தின் இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரிவின் பொறுப்பாளர் அப்துல்லாஹ் ஓர்கோபியை சந்தித்த போது இந்த உதவியை கோரியுள்ளார்.
இந்தப் புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட தூதுவராக இன்று சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி வரை அவர் அங்கு பல்வேறு தரப்பினரை சந்தித்து எரிபொருள் விநியோக உதவியை பெற்றுக் கொள்வது குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.