Welcome to Jettamil

கடற்படை ரேடாருக்காக தனியார் காணிகளை வழங்க முடியாது: வலி. வடக்கு பிரதேச சபை தீர்மானம்

Share

கடற்படை ரேடாருக்காக தனியார் காணிகளை வழங்க முடியாது: வலி. வடக்கு பிரதேச சபை தீர்மானம்

யாழ்ப்பாணம் – கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைப்பதற்காகக் கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 16) நடைபெற்றபோதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபையில் நடந்த விவாதம்:

போதைப்பொருள் ஒழிப்புக்காக ரேடார் அமைக்கவே காணி கோரப்படுவதாகவும், காணி உரிமையாளர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், இந்த விடயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்த தவிசாளரும் ஏனைய கட்சி உறுப்பினர்களும், “போதைப் பொருள் ஒழிப்புக்கும் காணி சுவீகரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. ரேடார் அமைப்பதற்கு இரண்டு ஏக்கர் தேவையில்லை. ‘மக்கள் காணி மக்களுக்கே’ எனக் கூறிவிட்டு மக்கள் காணிகளைச் சுவீகரிக்க அனுமதிக்க முடியாது” எனக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் மக்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில் பிரதேச செயலாளருக்குக் கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை