உயர்தர டின் மீன்களை சந்தைக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், உள்ளூர் டின் மீன்களின் தரம் தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபைக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாகவும், அது கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.