முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக உயர்த்துவது தொடர்பில், பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகள் எவ்வாறு பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் இன்று முதல் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 6ஆம் திகதி முதல் ஏனைய மாகாணங்களிலும் இது அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.
www.wptaxi.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யலாம்.
இது படி 11 இன் கீழ் செயல்படுத்தப்பட வேண்டும் மற்றும் முச்சக்கர வண்டியின் புகைப்படங்களும் அதில் சேர்க்கப்பட வேண்டும்.