Welcome to Jettamil

யாழ் மாநகர சபையின் முதல்வருக்கு எதிராக போராட்டம்…

Share

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வருக்கு  எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாநகர சபை அமர்வு இடம்பெற்ற போது முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து மாநகர முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் மாநகர சபையின் முதல்வருக்கு எதிராக போராட்டம்…

இதன்போது முதல்வரின் அராஜகம் ஒழிக, சபையின் மாண்பை காப்பாற்று, வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற கோஷங்கள் மாநகர சபை உறுப்பினர்களால் எழுப்பபட்டது. 

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை