Welcome to Jettamil

அலெக்ஸிற்கு நீதி வேண்டி கண்டனப் போராட்டம்!

Share

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸிற்கு நீதி வேண்டி கண்டனப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது,

வட்டுக்கோட்டைப் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸன் (அலெக்ஸ்) அவர்களின் மரணத்திற்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் எதிர்வரும் 03.12.2023 ஞாயிற்றுக் கிழமை பி.ப 3.00 மணிக்குக் கண்டனப் போராட்டம் வட்டுக்கோட்டைச் சந்தியில் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்தில் அனைவரும் திரண்டு எமது எதிர்ப்பைப் பதிவு செய்வோம், நீதிக்கான குரலை ஓங்கி ஒலிப்போம்.

அல்லது இன்று அலெக்ஸ், நாளை? – என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை