Welcome to Jettamil

இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு மட்டக்களப்பில் போராட்டம்

Share

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் காரணமாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கும் நிலைமையினை தடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இஸ்ரேல் – பலஸ்தீன இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானம் வரவேண்டும்,இனம்,மதம்,மொழி ஒற்றுமையினை சர்வதேச நாடுகள் உருவாக்கவேண்டும்,இருதரப்பு அப்பாவி மக்களின் உயிர்களை மதிப்போம் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச நாடுகள் இரு நாடுகளுக்கும் ஆயுதங்கள் வழங்குவதை விடுத்து யுத்ததினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை