Welcome to Jettamil

இந்திய இழுவைப் படகுகளின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Share

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனத்தினர் மற்றும் மீனவ சமூகங்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள் “அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, கடற்றொழில் அமைச்சரே இந்திய இழுவை படகுகளின் வருகையை நிறுத்துங்கள், கைதுசெய் கைதுசெய் இந்திய இழுவைப் படகுகளை கைது செய் என கோஷமிட்டு, பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முடிவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை