Friday, Jan 17, 2025

இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

By Jet Tamil

நேற்றையதினம் காரைநகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தரம் ஐந்தில் கல்வி கற்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

11ஆவது இலங்கை காலாட்படை அணி ஏற்பாட்டில், 513வது காலாட்படை தலைமையகத்தின் மேற்பார்வையில், ஸ்ரீ முருகன் பிரதீப லோக அமைப்பினால் இவ்வாறு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வானது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு இறை வணக்கத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் நிகழ்வுகள் இடம் பெற்றன. பின்னர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 169 மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் 513வது படைத் தலைமையக பொறுப்பதிகாரி பிரிகேடியர் எம்.ஆர்.ராஸிக், 515வது படைப்பிரிவு பிரிகேடியர் எல்.கே.பெர்ணாந்து, 51வது படைப்பிரிவு டியூ, 51வது  சேனாங்க மூலஸ்தான படைப்பிரிவு பொறுப்பதிகாரி ஏ.கேணல் ஜி.எஸ். டபிள்யூ.டி.கே.ரி.கெவின் பெரேரா, காரைநகர் உதவிப் பிரதேச செயலர் கு.கஜனி, இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர் 

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு