Welcome to Jettamil

ஜூலைக்குப் பின் சர்வஜன வாக்கெடுப்பு – ஜனாதிபதி  ரணில் திட்டம்

Share

நாடாளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பாக,  எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால்,  சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கத்தினருடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் பெரும்பான்மையானோர் தற்போதுள்ள அரசியல் முறைமையை எதிர்க்கின்றனர். எனவே அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் முறைமை உருவாக்கப்பட வேண்டும்.

அதற்கமைய அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரமாக குறைத்து , ‘மக்கள் சபை’ வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றேன்.

அத்தோடு பிரதேசசபைகளின் நிறைவேற்று அதிகாரம், தலைவருக்கு பதிலாக தலைவரை பிரதானமாகக் கொண்ட குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.

அடுத்த பிரதேசசபை தேர்தலுக்கு முன்னர் இந்த திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட வரைபை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் மோசடிக்கு பிரதான காரணம் விருப்பு வாக்கு முறைமையாகும்.

எனவே வெகு விரைவில் விருப்பு வாக்கு முறைமை அற்ற பட்டியல் முறைமை அல்லது கலப்பு முறைமையுடன் தேர்தல் முறைமைக்குச் செல்ல வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை