Welcome to Jettamil

369 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு

Share

369 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு  இதுதொடர்பாக அறிவித்துள்ளது.

அத்துடன், பல உற்பத்திகளுக்கு 100% கட்டண வீத அதிகரிப்பை நேற்றுமுதல் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும், குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கு மீண்டும் 100% வரி விதித்துள்ளது.

உதாரணமாக, இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீஸின் வரி 1000 ரூபாயாக இருந்தால்,  2000 ரூபாயாக அதிகரிக்கும்.

யோகட் உட்பட பால் உற்பத்திப் பொருட்களுக்கும் மேற்குறிப்பிட்ட வரியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டோக்களின் டயர்களின் விலைகள் 50% அதிகரிக்கப்பட்டுள்ளன.

குளிரூட்டி, சலவை இயந்திரம், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், குளிர்சாதனப் பெட்டி, அலைபேசிகளின் விலைகள் 100% உயர்ந்துள்ளதுடன், ஏனைய மின்சாதனங்களின் விலைகள் 15% உயர்ந்துள்ளன.

அப்பிள் மற்றும் திராட்சை பழங்கள் மீதான இறக்குமதி வரி ஒரு கிலோ கிராமுக்கு 300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சொக்லேட் மற்றும் கோகோ கொண்ட பிற உணவு தயாரிப்புகளுக்கு  200% மேலதிக வரியை  நிதி அமைச்சு விதித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை