Welcome to Jettamil

காரைநகர் சுற்று வீதியை புனரமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Share

காரைநகர் சுற்று வீதியை புனரமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

காரை நகர் சுற்று வீதியை புனரமைத்து தருமாறு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செந்தூரன் ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.

நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்படி கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.

கடந்த  1999 ம் ஆண்டிலிருந்து தங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் ஐக்கிய  தேசியக் கட்சியுடன் இணைந்து பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

16 கிலோமீற்றர் நீளமுள்ள காரைநகர்  சுற்று வீதி நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது  அவ்வீதியினை பயன்படுத்துவோர் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இலங்கையில் மிகவும் மோசமாக நிலையுள்ள வீதியாக காரைநகர்  வீதி காணப்படுகின்றது 

எனவே மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் காரைநகர் சுற்று  வீதியினை உரிய வடிகால் அமைப்பு முறைகளுடன் புனரமைப்பு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை